இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உதவி பொலிஸ் அதிகாரி 1 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில், கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.