பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பிரேரணை தொடர்பில் ஆகஸ்ட் 05ஆம் திகதி விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதிகாரிகள் நீக்கல் (செயல்முறை) சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தற்போதைய பொலிஸ்மா அதிபரை அகற்றும் காரணங்களை விசாரிக்க மற்றும் அறிக்கையிட விசாரணைக் நியமிக்கப்பட்ட குழு பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்க பரிந்துரை செய்துள்ளதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று முன்தினம் (22) பாராளுமன்றிற்கு அறிவித்தார்.
விசாரணையின் முடிவில், குறித்த அதிகாரி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டத்தின் பிரிவு 8(2) இற்கு அமைய குற்றவாளி என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், குற்றவாளி என்பது தொடர்பான தீர்மானம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இது குறித்து விவாதித்து வாக்களிக்க நாளொன்று அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய ஓகஸ்ட் 05ஆம் திகதி விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.