follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉள்நாடுஅதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாக இலங்கை அடையாளம்

அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாக இலங்கை அடையாளம்

Published on

இந்நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.

“நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மிகவும் தரமான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றா நோய்கள் தொடர்பில் இலங்கை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. 20% இற்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாகவும் இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களில் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்கள் அடங்குகின்றன.

மேலும், வேகமாக முதுமையடையும் மக்கள்தொகை கொண்ட நாடென்ற வகையில், நினைவாற்றல் குறைபாடு, கண் நோய்கள், எலும்பு நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை போக்குவதற்கு பெருமளவிலான அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில், மருத்துவ விநியோகத் துறையையும், கொள்முதல் செயல்முறையையும் வெளிப்படையானதாக மாற்ற ஒன்லைன் முறையைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக ஏற்கனவே மொரட்டுவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் கணனி துறைகளுடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருகின்றது” என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவி...

அரச துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான...