பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் இந்த விடயம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிலநாட்களிற்கு முன்னர் நாரம்மலவில் இடம்பெற்ற சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.