follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்எகிப்தில் படையெடுக்கும் தேள்கள்

எகிப்தில் படையெடுக்கும் தேள்கள்

Published on

எகிப்தில் தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் பெய்த கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேள்களின் நடமாட்டம் வீதிகளில் அதிகரித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்...