2020 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க சதி செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டவிலக்களிப்பிற்கான உரிமையில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்காக தனக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என டிரம்ப் தாக்கல் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.