follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2இரவு இரவாக டயானாவின் வீட்டில் பொன்சேகா யாரை சந்திக்கிறார்?

இரவு இரவாக டயானாவின் வீட்டில் பொன்சேகா யாரை சந்திக்கிறார்?

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இரகசியமாக ‘ஜனாதிபதியுடன்’ கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டுகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் உள்பிரச்சினைகளை உள்ளுக்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்றார்.

“..சரத் பொன்சேகாவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என வழக்குத் தொடரப் போவதாகவும் எனக்குச் செய்தி கிடைத்தது. வழக்கு தொடரப்போனால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துட்டு செல்லுங்கள்..”

“டயானா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இரவு இரவாக சரத் பொன்சேகா சந்தித்து வருவதாக நான் நேற்று ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன்… டயானா கமகேயின் கணவர் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர்…”

“இதெல்லாம் நல்லமில்லை, துரோகம்.. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்க வேண்டும். ரணிலுடன் இருந்தால் டாடா பாய் என செல்ல வேண்டும்.. கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். நமக்கும் உண்டு. அதற்காக வெளியே போய் ஹீரோவா கத்த வேண்டிய எந்த தேவையும் இல்லை.. “

‘சரத் பொன்சேகா’ தொடர்பான இந்த நெருக்கடி சில தினங்களுக்கு முன் எழுந்தது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ‘தயா கமகே’ வந்தது ‘சரத் பொன்சேகா’விற்கு பிடிக்கவில்லை.

‘பொன்சேகா’வை உடனடியாக நீக்க வேண்டும் என அக்கட்சியின் ‘மூத்தவர்கள்’ பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும்...