தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவியை வகித்து வரி செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அந்த நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க அழைப்பாணை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த உள்நாட்டு இறைவரி ஆணையாளர், நீதிமன்றத்தில் ஆஜராகாத மனுஷ நாணயக்கார உள்ளிட்ட நான்கு பணிப்பாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளார்.