follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பம்

சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பம்

Published on

மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன்வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகும் கொள்கையின் கீழ் கொழும்பு ஹில்டன் ஹோட்டலை தனியார் துறை முதலீட்டிற்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஏற்கனவே நான்கு வர்த்தகர்கள் அதற்காக முன் வந்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் முதலீடு நிச்சயமாக அங்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் .மேலும் எமது அமைச்சின் கீழ் உள்ள ஹயாத் ஹோட்டலின் 50% பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான முதலீட்டாளரையும் தேடுகிறோம். டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் தாமரை கோபுரத்திலிருந்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான இரு பக்கங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள பேர வாவிகளை சுத்தப்படுத்தும் ஜப்பானிய அரசாங்கத்துடனான திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
டிப்படையில் எதிர்கால பணிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

இந்தியா, சீனா மற்றும் பல்வேறு தேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை வலுவடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் பார்வை இலங்கையின் மீது திரும்பியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...