அநுர குமாரவுக்கு மீண்டும் சவால்

749

நாட்டுக்காக முன்வைக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பொருளாதார நிபுணர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் விவாதத்திற்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழாவது தடவையாக இந்த சவாலை முன்வைப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி தனது சவாலை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை விவாதத்திற்கு அழைத்த போது, ​​அநுர திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பரிவாரங்கள் மறைந்திருந்ததாகவும், அப்படியானால், இவ்வாறானதொரு பகிரங்கச் சபைக்கு முகம் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்ததாலேயே இவ்வாறு செயற்படுவதாகவும் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here