follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்

பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்

Published on

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி போலி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தபால் திணைக்களம் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. தனது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் வங்கி அட்டை மற்றும் கடன் அட்டை தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை என தபால் திணைக்களம் குறிப்பிட்டு்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...