follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2இந்திய அணியின் முதல் நட்சத்திரங்கள் இருவரும் ஓய்வு

இந்திய அணியின் முதல் நட்சத்திரங்கள் இருவரும் ஓய்வு

Published on

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கிண்ண 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற நிலையில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு ஐசிசி டி20 உலகக் கிண்ண வென்று செம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தி உள்ளது.

இறுதிப் போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது, இது தனது கடைசி சர்வதேச டி20 போட்டி இதுவென அவர் அறிவித்து, ஓய்வு பெற்றார்.

இதுதான் என்னுடைய கடைசி டி20 உலக கிண்ண போட்டி. உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டேன். அது தற்போது நனவாகியுள்ளது.

இனி இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம், டி20 யை அவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். இது எனக்கு 6வது டி20 உலக கிண்ண போட்டி, ரோகித் சர்மாவுக்கு 9வது டி20 உலக கிண்ண போட்டி என்று என்று விராட் கோலி கூறினார்.

2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் கோலி, இதுவரை 125 போட்டிகளில் விளையாடி 4,188 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 38 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அதில் அடங்கியுள்ளன.

விராட் கோலியின் ஓய்வை தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. நான் கிண்ணத்தை மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது. என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

ரோகித் சர்மா டி20-யில் 159 போட்டிகளில் விளையாடி 4231 ஓட்டங்களை குவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அவரது டி20 பயணம் 2007-ல் அறிமுகமான டி20 உலகக் கிண்ணத்துடன் தொடங்கியது.

அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, தலைவராக இந்தியாவை இரண்டாவது உலக கிண்ணத்தை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கும் இதுவே கடைசி போட்டியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...