follow the truth

follow the truth

June, 22, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொஹட்டுவ வேறு வேட்பாளரை கொண்டு வருவது நாட்டுக்கு நல்ல செய்தி

பொஹட்டுவ வேறு வேட்பாளரை கொண்டு வருவது நாட்டுக்கு நல்ல செய்தி

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

இதன்படி, இணைந்து வேட்பாளரை முன்வைத்து நாட்டை வங்குரோத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவின் ஊடாக நாட்டு மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கும் திறனைப் பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது மற்றும் கட்சியின் கருத்து அடுத்தவாரம் அறிவிக்கப்படும் எனவும், ராஜபக்சக்களுடன் இணைந்துள்ள எந்தவொரு முகாமுக்கும் தனது மற்றும் கட்சியின் ஆதரவைப் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது அவரை ஜனாதிபதியாக வைத்திருக்கும் நபர்களை பொறுத்தே தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து மீதான விசாரணையில் இதுவரை 28 அரச தரப்பு சாட்சியளர்கள் சாட்சியளிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்,...

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணிலில் கருத்தை கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி...

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...