2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி மாவட்டச் செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று (11) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டி சந்தியில் இருந்து பார்க் வீதி சந்தி வரையிலான பேஸ்லைன் வீதி, கொழும்பில் இருந்து கிருலப்பனை நோக்கி செல்லும் இடது பாதை இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
இதே வீதியின் மற்றுமொரு பாதையான பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரையான பொரளையை நோக்கிய நுழைவுப் பாதையானது இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.