follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

Published on

இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு கடந்த 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரம் தேவையென சட்டவரைஞரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை துரிதமாகத் தயாரித்து அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...