கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டு யானை ஒன்று ரயிலில் மோதியதன் காரணமாக ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.