follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1ரயில்கள் நின்றுவிடுமா? 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

ரயில்கள் நின்றுவிடுமா? 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ, இந்த வேலைநிறுத்தம் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

நிர்வாகப் பிரச்சினைகள், பணி நிலைமைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள், தங்களது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று (28) ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படவில்லை என சந்தன வியந்துவ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள...

ஜூலை மாத முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்...