follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published on

தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களை மொஸ்கோவுக்கு பயணிக்குமாறு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

பெலாரஸில் சுமார் 1,561 இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியில் ஈடுபடுகின்ற நிலையில், அங்குள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பை  பேணி வருகின்றது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன் தூதரகம் சந்திப்புக்களை நடத்தியுள்ளது.

அவற்றில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் படி, தற்காலிகமாக நாடுதிரும்ப விரும்பும் மாணவர்கள், மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதை எளிதாக்கும் பணியில் தூதரகம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இது சம்பந்தமாக, மொஸ்கோவில் உள்ள தூதரகம், பெலாரஸில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, அத்தகைய மாணவர்களுக்கு மொஸ்கோ வழியாக பயணம் செய்வதற்கு அவசர அடிப்படையில் விஸாவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய 0079 801 445 726 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது slemb.moscow@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...