தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையினூடாக இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 6 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.