கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது பிறந்த நாளை கொண்டாடியுள்ளதுடன், இதில் அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டின் பிரதமரே விதிகளை மீறியமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லண்டன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விதி மீறல் உறுதியானதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.