அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை எனவும், அவ்வாறு இடம்பெற்றால் அது “புதிய போத்தலில் பழைய சாராயம்” போன்றாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது.
ஏனெனில் ஜோன்ஸ்டன், மஹிந்தானந்தவை ஜனாதிபதி, பிரதமராக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சரத் பொன்சேகா
இவ்வாறு குறிப்பிட்டார்