அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த 24 மணித்தியாலங்களில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 43 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் மேலும் பலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
வன்முறைகள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள 791 முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், மேல் மாகாண பொலிஸ் நிலையங்கலுக்கே கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸார் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 444 என தெரிவித்தனர்.