காலத்துக்கு காலம் ஜெனிவாவை காட்டி தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவார்கள்.அப்படித்தான் இம்முறை வித்தை காட்டுகிறார்கள்.மக்களுக்கு இப்போது என்ன தேவை என்று நாம் சிந்திக்க வேண்டும்.தும்மினாலும் சர்வதேசம் மருந்து தர வேண்டும் என்று இங்குள்ள தமிழ் கட்சிகள் கேட்கிறார்கள் என இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.உங்கள் தலைவர்களை கொன்றவர் பிரபாகரன் தான்.அவர் சார்பில் இறந்தவர்களை நினைவு கூருவது பிரியோசனமற்றது.நாட்டின் நிலைமை,மக்களின் நிலைமை அறிந்து இப்போது நாம் செயற்பட்டு வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.