உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளரை(உள்ளூராட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்றுசந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க,பிரதம செயற்பாட்டு பிரதானி நளின் பண்டார,ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.