follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉள்நாடுசமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Published on

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இந்தச் சட்டமூலம் கடந்த 08ஆம் திகதி மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

வருடமொன்றில் கூட்டுமொத்தம் நூற்றியிருபது மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும். இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும்.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் இன்று (21) முதல் நடைமுறைக்கு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...