ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இருவரால் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் உள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கடைக்கு அருகில் அமைச்சர் தனது காரை நிறுத்தி உரையாடலில் ஈடுபட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் இருவர் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவசத்தால் அவரை தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.