அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கத் தெரிந்த உங்களுக்கு நோயாளர்களின் வலி, வறுமை தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய சபை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர்,
நாட்டுக்கு, மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய மறுக்கிறீர்கள். வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில், நோயாளர்களுக்கு வழங்கப்படும் பால், மீன் ஆகியவற்றை நிறுத்துமாறு கடிதம் அனுப்பி உள்ளீர்கள்.
என்ன அரசாங்கம் இது. மக்களின் நோயாளர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கத் தெரிந்த உங்களுக்கு நோயாளர்களின் வலி, வறுமை தெரியவில்லை.
இப்படி ஒரு மடத்தனமானவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி நடத்துவீர்கள். அதை முன்பே தெரிந்து தான் நாம் இங்கே உங்கள் பதவிகளை ஏற்கவில்லை. ஒரு தேர்தல் ஒன்றை வைத்துப் பாருங்கள் மக்கள் பதில் சொல்வார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.