follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடு05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

அநுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த துப்பாக்கிச்...

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...