follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1இன்றும் மழையுடன் கூடிய வானிலை

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

Published on

இன்று (25) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வட மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...