follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2பலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை இன்று வெற்றி காணுமா?

பலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை இன்று வெற்றி காணுமா?

Published on

பலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐநாவில் பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராவது குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் மத்தியில் பலஸ்தீனத்தின் குரல் வலிமையாக ஒலிக்கும்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,500க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காஸாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஐநாவில் பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்குவது குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. இன்று வரை பலஸ்தீனத்தின் கோரிக்கைகளை ரஷ்யாவும், சீனாவும் இன்ன பிற இஸ்லாமிய நாடுகளும் ஐநாவில் ழுன்வைத்து வருகின்றன. இந்த தருணத்தில் பலஸ்தீனம் நிரந்தர உறுப்பினராகிவிட்டால் போர் நிறுத்தம் குறித்தும், இஸ்ரேல் அத்துமீறல் குறித்தும் வலுவான வாதங்களை சர்வதேச நாடுகள் மத்தியில் வைக்க முடியும்.

இதற்கான தயாரிப்பில் பலஸ்தீனம் தற்போது இறங்கியுள்ளது. ஆனால், அமெரிக்காவும் இன்ன பிற அமெரிக்க ஆதரவு நாடுகளும் இதில் குழப்பாமல் இருந்தால் சரி.

தற்போது ராஃபா எல்லையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இங்கு 15 லட்சம் பலஸ்தீனர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...