follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவிளையாட்டுஇலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

Published on

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இன்று (14) காலை நாட்டுக்கு வந்தனர்.

முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, காலி விளையாட்டரங்கின் 4ஆம் இலக்க வாயில் ஊடாக பொதுமக்கள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்புக்கு எதிர்வரும் 21ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு நாளில் தமது கிராமங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு இலங்கை வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே மதியம் மீண்டும் அணியில் இணைந்து கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெற உள்ளது.

Monara

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...