follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2'அசோக ரன்வல' எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை.. ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் அறிவிப்பு

‘அசோக ரன்வல’ எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை.. ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Published on

முன்பை விட இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்.

பல மாற்றங்களுடன் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வந்த இந்த குழு பற்றி நிறைய பேர் பேசினர்..

இவர்களில் சபாநாயகர் அசோக ரன்வல இன்னொரு விசேடமானவர்.. எனினும் அவரைப் பற்றிய கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக நாம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.. அந்தக் கதைகளுக்கு முன்னால் அவர் மௌனமா..? இது பற்றி வெளியான அண்மைய கதைதான் இது.

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகமும் கலாநிதி பட்டம் வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சமூகத்தில் எழுந்த விவாதத்துடன், பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தில் இருந்து அவரது பெயருக்கு முன் இடப்பட்டிருந்த கலாநிதி பட்டமும் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்; சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல என்ற நபர் தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ​​திசைகாட்டியில் இருப்போர்கள் உண்மையிலேயே பேராசிரியர்களா என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.

நிலைமை குறித்து சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கேட்டபோது, ​​இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார் என அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை அமைச்சரின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர்...

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...