2023 ஆம் ஆண்டில் நடாத்தப்படவிருந்த ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களால் வைப்புச் செய்யப்பட்ட வைப்புப் தொகையை திரும்பப் பெற, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.