பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியின் கீழ், ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, தலைமையினை வகித்தார்.
இதற்கு முன்னர், இந்த அழகு நிலையம் பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்பெறும் வகையில் செயல்பட்டிருந்தது. ஆனால் தற்போது,
பெண் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சலுகை விலையில் இந்த சேவையைப் பெற முடியும்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பெண்களுக்கு இங்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவதே இந்த திட்டத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்த அழகு நிலையம், பொலிஸ் சேவை பெண்கள் பிரிவு பதில் தலைவர் நில்மினி சமரதுங்க, சந்தீபா செவ்மினி, மற்றும் பொலிஸ் களப் படை தலைமையக கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி ஆகியோரின் ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அழகு நிலையம், பொலிஸ் சமூகத்தில் பெண்களின் உடலியல் மற்றும் மனநல வளர்ச்சிக்கு உதவியாகவும், துறையின் சமூக தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.