சிரியாவின் ஸ்வீடாவின் ட்ரூஸ் நகரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளன.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெற்கு ட்ரூஸ் நகரில் சிரிய அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு சிரியாவில் உள்ள ட்ரூஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிரிய இராணுவத் தொடரணி தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டுள்ளது.