கடந்த காலங்களில், நாட்டில் பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெற்றது, இது இடமாற்றங்கள் மற்றும் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை கண்காணிக்கும் அதே வேளையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சுகாதார அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தாதியர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அவசரத் திட்டங்கள் செயற்படுத்தபட உள்ளன. எதிர்காலத்தில் சுகாதார சேவைக்கு 1990 சுகாதார ஊழியர்கள் உள்வாங்க பட உள்ளனர்.அனைத்து சுகாதார சேவைகளையும் வினைத்திறனுடன் நெறிப்படுத்த திட்டங்கள் செயல்படுத்தபடஉள்ளன.
வட மாகாண மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் திறம்படச் செய்து மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சமீபத்தில் வட மாகாணத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப துணை ஊழியர்களை நியமிப்பதில் பயன்படுத்திய தன்னிச்சையான முறை மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சுமார் 1,990 துணை ஊழியர்களை வெளிப்படையான முறையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் சுகாதார ஊழியர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகார வரம்புகளுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சேர்ப்பு செய்ததால், சுகாதார சேவை ஊழியர்களை மாற்றுவதிலும், காலியிடங்களை நிரப்புவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
தற்போது அவர்கள் பதுளை, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள்ள காலியிடங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் முன்னுரிமை அளித்து இத்தகைய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள 1,000 சுகாதார உதவியாளர்களை உதவியாளர் பதவிக்கு உயர்த்துவதன் மூலம் மேலும் 1,000 பேரை பணியமர்த்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.