உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.