பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன், இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர், “City of Dreams” எனும் பிரமாண்ட விருந்தகத்தின் திறப்பு விழாவில் பிரத்யேக விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த விழா 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்னதாக, இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் தனது பயணத்தை ரத்துச்செய்துள்ள நிலையில், அந்த இடத்திற்கு ஹிருத்திக் ரோசன் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிகழ்வு இலங்கையின் பிரபலங்களுடன் இணைந்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.