தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், துப்பாக்கி இயங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தெஹிவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.