கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) காலை, சுமார் ரூ.400 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருட்களுடன் ஒரு 52 வயதுடைய கனடா பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, இந்த கைது இடம்பெற்றது.
சந்தேகநபர் ஒன்ராறியோ, கனடா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், கனடாவிலிருந்து கட்டார் எயார்வேயின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு பயணம் செய்துள்ளார். விமான நிலையத்தில் அவரது பயணப் பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 12.196 கிலோ ஹஷீஷ், 5.298 கிலோ கொக்கேய்ன் என மொத்தம் 17.494 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.