13ஆவது தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் தலைமையில் இன்று (19) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள தேசிய படைவீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.
இலங்கை ஆயுதப் படைகள் பயங்கரவாதத்தை தோற்கடித்து மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து 2009 மே 18 அன்று நாட்டில் அமைதியை, நிலைநாட்டியது. பயங்கரவாதிகளுடனான போரின் போது ஏராளமான போர்வீரர்கள் தாய்நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
இதற்கமைய, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உயிர் தியாகங்களைச் செய்த அனைத்துப் போர்வீரர்களும், அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவைகளும் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டன.
தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுக்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.