சுற்றுலாத்துறை மூலம் ஆண்டு வருமானத்தில் 4.5 பில்லியன் டொலர்களை ஈட்டித்தருவதாகவும், ஐந்து இலட்சத்திற்க்கும் அதிகமானோர் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெறுவதோடு, முப்பது இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஓர் துறை இன்று பழைய ஏற்பாடுகளால் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறை சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இச் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத்துறையை எவ்வாறு மீட்டெடுக்க முடியும் என்பது குறித்ததுமான நீண்ட கலந்துரையாடலொன்று இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஹோட்டல் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலையே இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அந்தத் துறையானது கூட்டு முயற்சியாண்மை மற்றும் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக பயனுள்ள கருத்தாடல்தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவிற்கும், சுற்றுலாத் துறை சார்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை திட்டமிடல் பிரிவிற்கும் இவ்விடயம் சார்ந்து மேற்கொள்ளத் தேவையான பாரிய வேலைத்திட்டங்கள் பொறுப்பளிக்கப்பட்டடுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.