நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அடுத்தவாரம் அழைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், 1969ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.08ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2022ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதி என்பன நிதி பற்றிய குழுவினால் அனுமதிக்கப்பட்டன.
இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை உள்ளூர் கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக்கான பொருட்களுக்காக சேமிப்பது இந்த வர்த்தமானி அறிவித்தலின் நோக்கமாகும்.
இதற்கமைய தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களில் 369 பொருட்களுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒழுங்கு விதிகளை விதிக்கும் 2022.04.09 திகதிய 2274/42 இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் 10ஆம் திகதி அல்லது இதற்குப் பின்னர் கடல் மார்க்கமாக அல்லது ஆகாய மார்க்கமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்த ஒழுங்குவிதி ஏற்புடையதாகும்.