இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

1039

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை 12,290,482 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here