கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அறிவித்துள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கொரோனா நிலை 4 ஆக உயர்வடைந்துள்ளதால், அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.