ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் மீட்பு

608

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் தொகையை சோதனையிட்டதில் அதில் 21 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 4200 ஒக்சிமீட்டர் தொகை கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 2,344,642 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவன அதிகாரிகளிடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த ஒக்சிமீட்டர்களை விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுங்க தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here