பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடபெறவுள்ள கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.