follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉலகம்ராகுல் காந்தி : அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை

ராகுல் காந்தி : அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை

Published on

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கிரிமினல் அவதூறு வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அவர் உடனடியாக சிறைக்கு செல்ல மாட்டார் – அவருக்கு 30 நாட்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது மற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு தேர்தல் பேரணியின் போது பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப்பெயர் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்காக அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, அனைத்து திருடர்களுக்கும் ‘மோடி’ என்ற பொதுவான குடும்பப்பெயராக ஏன் இருக்கிறது என்று கேட்டிருந்தார் – அந்த நேரத்தில் இருந்து ஊடக அறிக்கைகளின்படி, அவர் தப்பியோடிய வைர அதிபர் நிரவ் மோடி மற்றும் பிரீமியர் லீக் தலைவர் லலித் மோடியை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பூர்ணேஷ் மோடியின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது, ராகுல் காந்தியின் கருத்துகள் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்தியதாகக் கூறினார்.

இந்த வழக்கில் சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பூர்ணேஷ் மோடி இலக்காகாததால் நரேந்திர மோடி முறைப்பாடு அளித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான...

மாஸ்கோவை தாக்க டிரம்ப் யோசனை – ஜெலன்ஸ்கி கொடுத்த பதில்

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல இலட்சம்...

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார்.  தென்கிழக்கு ஆசிய நாடான...