இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை

185

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது.

தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது.

இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று இரத்து செய்யப்பட்டன. 3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து, சாம்பலை மத்திய தரைக்கடல் தீவில் கரைகிறது. கடைசியாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலால், பிரபல சுற்றுலாத் தலமான கேடானியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை இரத்து செய்யப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here