follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1வனிந்துவுக்கு ஐசிசி இனால் அபராதம்

வனிந்துவுக்கு ஐசிசி இனால் அபராதம்

Published on

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் நடந்து கொண்ட விதத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போட்டியில் ஆட்டமிழந்து மைதானத்திற்கு திரும்பும் போது வனிந்து ஹசரங்க தனது துடுப்புமட்டையால் எல்லைக்கு அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இது நடத்தை விதிகளின் முதல் தர மீறல் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, தகுதிக்குறைவு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வருடத்தில் வனிந்து ஹசரங்க செய்த இரண்டாவது குற்றச்செயல் இது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...

“ஈரான் ஜனாதிபதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் துயர மரணம் தொடர்பில் முன்னாள்...